பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கருத்தாகக் கூறப்பட்டிருப்பதை நாம் கண்டு, ஒரு முடிவுக்கு வரலாம்.

ஒடுகளப் போட்டிகள் உருவாகி மேல் நாடுகளில் உற்சாகத்துடன் வளர்ந்து வந்த நேரத்தில், கல்லூரி மாணவர்களிடையே அதிக ஈடுபாடும் உற்சாகமும் நிரம்பித் ததும்பிய காலத்தில், ஒரு சிறப்பான காரியத்தை அல்லது அரிய செயல் ஆற்றிய ஒருவரது திறமையைக் குறிக்க Stunt என்று பயன்படுத்தியிருக் கின்றனர்.

அதற்குரிய பொருளானது Feat என்பதாகும். Feat என்றால் அருஞ் செயல், வீரச் செயல், செப்படி வித்தைச் செயல் என்பதாகும். ஆக, சிறப்பான ஒரு காரியத்தைக் குறிக்கவந்த சொல்லானது, இன்று எந்தப் பொருளைக் குறித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா!

32. FORFEIT

Forfeit எனும் ஆங்கிலச் சொல்லானது, ஒரு பிரேஞ்சுச் சொல்லிலிருந்து தோன்றி வந்திருக்கிறது.

Fors, Fait என்ற இரண்டு சொற்களின் கூட்டாக உருவாகியிருக்கும் Forsfaite எனும் சொல்லின் அர்த்தமானது, ஆங்கிலச் சொல்லின் இன்றைய பொருளுக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது.

Fors எனும் பிரெஞ்சுச் சொல்லுக்கு வெளியே (Outside) என்பது பொருளாகும்.

Fait எனும் பிரேஞ்சுச் சொல்லுக்கு செய்தல் (Done) என்பது பொருளாகும்.