பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தண்டிப்பதற்குரிய சொல்லாக, உரிமையைப் பறிக்கும் ஆணையாக இந்த Forfeit இன்று விளையாட்டுத் துறையாளர்களால் வழங்கப்படுகிறது என்பது ஒன்றே இதன் பெருமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

33. OLYMPIAD

ஒலிம்பிக் பந்தயங்களின் சிறப்பையும் பெருமையையும் எல்லோரும் அறிவார்கள்.

உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொறுப்பேற்று நடத்தித்தர வாய்ப்புப் பெற்ற நாடு ஒன்றில் கூடி, போட்டியில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்திக் காட்டும் வீறுபெற்ற வீரர்கள் இடையே நடக்கும் போட்டிகளையே ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கின்றார்கள்.

கிரேக்க நாட்டிலே விளையாட்டுப் போட்டிகளை மிகப்பெரிய அளவிலே, புனிதம் நிறைந்த தன்மையிலே, நடத்தப் பெற்றன என்று வரலாறெல்லாம் புகழாரம் சூட்டி மகிழ்கின்றது. கிரேக்கர்கள் நடத்திக் காட்டிய போட்டிகள் நான்கு பெயர்களில் நான்கு இடங்களில் நடத்தப் பெற்றன.

இத்தகைய சூழ்நிலையை அறிந்து கொண்டால் தான். ஒலிம்பியாட் (Olympiad) என்றால் என்ன, அதன் பெருமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகத்தான் இக்குறிப்பினை இங்கே தந்திருக்கிறோம்.