பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


ஸ்டேடியம் என்பதற்கு, விளையாடுவதற்குரிய வெட்டவெளி அரங்கைச் சுற்றிலும் பார்வையாளர்கள் இருக்க இருக்கைகள் அமைந்த இடம் என்று ஆங்கில அகராதி ஒன்று பொருள் தருகிறது.

தமிழகராதியோ, பந்தயக்காட்சி அரங்கம் , சூழ்படியம் பலம் என்ற பொருள்தருகின்றது.

இத்தகைய ஓட்டப் போட்டிகள் நடத்தும் முறையும் விளக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை முரசொலி எழும்பும். விழாக் கோலம் கொண்ட பந்தய மைதானமே கலகலப்பு, உரையாடல், கூச்சல் , மற்றும் பேராரவாரத்தை அப்படியே நிறுத்தி, அமைதியாகிவிடும்.

உடனே, அறிவிப்பாளர்கள் அரங்கின் முன்னே வந்து, பங்குபெறும் வீரர்களின் பெயர்கள், அவர்களது நகரம், சாதனைகள் மற்றும் பல குறிப்புக்களைக் கூற, அதன் பின்னர் உரிய முறைப்படி பந்தயம் நடைபெறும்.

பந்தயம் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு முறை முரசொலி எழும்பும், மீண்டும் மைதானம், அரங்கம் முழுவதும் பேரமைதி கொள்ளும். அதனைத் தொடர்ந்து, வெற்றி வீரனின் பெயரை நடுவர்கள் அறிவிப்பார்கள். பரிசு வழங்கப்படும் ஆலிவ் மலர் வளையம் அணியப்படும்.

இவ்வாறு பகைவர்கள் கூடுகின்ற இடமான ஒலிம்பிக் பந்தய மைதானத்தில், ஒட்டுறவோடு உள்ளங்கள் இணைந்து போய், சட்டத்தை மதித்து, சமரசம் காத்து, சமாதானத்தோடு போட்டியிட வைத்து, சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்கிய பண்பினால்