பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


தான், ஒலிம்பிக் பந்தயங்கள் உன்னத சிறப்பினை எய்தின. உலகப் புகழ் அடைந்தன.

அந்த உன்னதத் தன்மையினால், மீண்டும் உயிர்த்து எழுந்து, உலகில் உலவி, உலகோரை அரவணைத்து, ஒப்பற்ற பல போட்டி நிகழ்ச்சிகள் நடத்தி, சமாதானத்தை சகலருக்கும் வழங்கும் செளபாக்கிய நிலையில் வாழ்கின்றன.

மனித குலத்திற்கு மாபெரும் துணையாக வாழும் விளையாட்டுக்களின் மகிமையை வெளிப்படுத்திய கிரேக்க இனமும், மலர்ச்சியுற்ற சமுதாயத்தின் மாபெரும் சுடராக அல்லவோ விளங்கி வருகிறது!

விளையாட்டை வாழ்த்தி வரவேற்று, மக்களை அதில் மனமார ஈடுபடுத்திய நாடுகள் வீழ்ந்ததுமில்லை. விளையாட்டை வெறுத்து, பழித்து, ஒதுக்கி, ஒதுங்கிய நாடுகள் உயர்ந்ததாக சரித்திரமும் இல்லை.

வையம் உயர வழிகாட்டும் விளையாட்டை வளர்த்து, அதற்குரிய அருமையான சொற்களையெல்லாம் வழங்கிய கிரேக்கம் காலத்தின் கோலத்தால் சற்று ஒதுங்கி இருப்பது போல் தோன்றினாலும், சீரிய நெறியில் வாழ்ந்த பழங்கால கிரேக்கத்தைப் போற்றிப் பணியாதார் யார் உளர்?

திறமை என்றும் போற்றப்படுவது மட்டுமல்ல, சரித்திரத்தில் நீங்காத இடமும் பெறும் என்பதைத் தானே இந்த வரலாறு நமக்கு நினைவூட்டுகின்றது!