பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வாழ்க்கையோ, என்னமோ ?... அழகான இமை விளிம்பு களிலே அழகான ஈரம் அழகாக விளிம்புகட்டிப் படரலாற்று. கீழத்தெரு அன்னம் உள்ளங்கைகளில் பரப்பிக் கிடந்த காசுகளை இனம் பார்த்து, இனம் பிரித்தபடி குனிந்த தலையை நிமிர்த்தாமலும் நிமிர்ந்த நெஞ்சைத் தாழ்த்தாமலும் அன்ன நடை நடந்து வருகிறாள். அடியே அன்னப்பொண்ணு அந்தாலே மயிலைக் காளை கொம்பு ரெண்டையும் சிலுப்பிக்கினு ஒம்மேலே பாயுறதுக்காவப் பாய்ஞ்சு ஒடியாருதுடியோ!' என்றாள் செல்லி அவ்வளவுதான் !- ஆத்தாடியோ!' என்று கதிகலங்க 'கடலே கடலேகதியென்று பின்வாங்கிய சமயத்தில், அன்னக்கிளியின் மண்டையைப் பதம் பார்த்தது சாம்பான் கிழவனுக்குக் குடிக்காணியாட்சிப் பா த் தி ய ைத கொண்டிருந்த ஒட்டு மாமரம். சுற்றிச் சூழப் பார்வையை மேய விட்டபோதுதான். அவள் ஏமாந்து விட்ட கதை விளங்கியது. செல்லிக்கு எப்பவுமே குறும்பு எக்கச்சக்கம் ! - புடிச்சாலும் புடிச்சிருக்குது புளியங் கொம்பப் பார்த்து அதுக்கு ராங்கி இருக்காதாக்கும் பின்னே ? மண்ணைக்கவ்வின பரிதாபத்திலே, மஞ்சள் தாலியை நிரடினான் அவள். செல்லியின் நாதச் சிரி ப் பு ஒய்ந்தபாடில்லை. காலை எட்டிப்போட்டு நடடி ; காசு பத்திரம். உம்மச்சானான மச்சான் உனக்கோசரம் அங்கிட்டுக் கஞ்சி குடிக்கத் தபசு கிடக்கும்டியோ !” என்று நையம்’ பாடின்ான். - . . .