பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பேரில் ... என்ன செய்வது ?... அருவருப்பை உதறிவிட ஒரு நிமிஷம் வேண்டியிருந்தது. பிறகு, கோப்பையை வாங்கினார், அவளுடைய பூங்கரங்களைப் பதனமாகப் பற்றிப் பிடித்தப்படி, கோப்பையை வாங்கிக் கொண் டார். ராணியை ஒரு முறை பார்த்துக்கொண்டு, சூப் பைக் குடித்தார். சூப்பை மட்டுந்தான் அவர் பருகி யிருக்க முடியும் அவளது திவ்யமான தேஜஸ் அவ ருடனேயே தங்கிவிட்டிருக்கிறது. காலிக் கோப்பையை வாங்கும்போது, அவரது கையைத் தொட்டு வாங்கினாள். "ஐயாவுக்கு ராத்திரிக்கு என்ன சமையல் ?' என்று கேட்டாள். வகைகள் சொல்லப்பட்டன. விடை பெற்றாள். தாம்பரத்தைக் குறி இலக்காக்கிப் பறந்தது மின்சார வண்டி. விவேகானந்தரின் நூல் தட்டுப்பட்டது. இரண் டொரு தினங்களில் முடித்தாக வேண்டாமா? எடுத்தார். வசமாக நாற்காலியில் அமர்ந்தார். கால்கள் ஆடின. மனம் லயித்தது. பரவசக் கவர்ச்சி இழைந்தது "கடவுளிடம் நம்பிக்கை அற்றவனை நாத்திகன் என்றன. பண்டைய மதங்கள். தன்னிடம் நம்-பிக்கை அற்றவனே நாத்திகன் எனப் புதிய மதம் காட்டுகிறது !...' அழகிய தத்துவச் சிந்தனைகள் பளிச்சிட்டன. என்ன தோன்றிற்றோ எழுந்து உள்ளே சென்றார் பீரோவைத் திறந்தார். டைரியை எடுத்துப் புரட்டினார்