பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "ஓஹோ, நாளைக்குத்தான் மணிமாறன் வருகிறான்! வேறு பக்கங்கள் ஓடின. வேறு சிந்தனைகள் ஓடின. சிந்தனைகள் கிளைபரப்பி விரிந்து, அந்த விரிவில் அவரது, அவரது ஆழ்ந்த சித்தத்தின் அனுபவ முத்திரைகள் பதிந்து விளையாட, அவ் விளை யாட்டில் விதியும் கூட்டுச் சேர்ந்து, விளையாட்டின் முடிவையே மாற்றிவிட்டு வினயபூர்வமாக நகைப்புக் காட்ட, அந்நகைப்பிலே காலம் கண்ணிர் சொரிந்து முடிவு சொல்ல, அம்முடிவின் தலையெழுத்திலே இப் போது ஒர் ஆரம்பம் உதயமாகி யிருப்பதைப்போலஉதயமாக இருப்பதைப்போல அவரது உள்ளுணர்வின் சக்தி செப்பியபோது, அவர் மனம் அடங்கி, மகிழ்வின் அமைதி பூத்தது. உள் ள த் தி ன் உள்ளம் குறிப்புக் காட்டியது. எஸ்...இன்டிட் ... ஆம் ; மனிதன் மனித னாக- மனிதனாகவேதான் இ ரு க் க வேண்டும் ?... அப்படித்தான் இருக்கவும் முடியும் !...” தாழ்வாரத்தில் நின்று எட்டிப் பார்த்தார் சிற்றம் பலம். பங்களாக்கள் வான வளையத்தை முத்தமிட்டன. தியாகராய நகரிலே பணத்துக்கு முடை இல்லை, எட்டிப் பார்த்தவரின் விழிக்கோணத்தில் அம்பாஸ்டர்’ எட்டிப் பார்த்தது. விரைந்து உள்ளே போனார். திரும்புகாலில், புதுக்கருக்குப் பெற்றிருந்தார். ஆடை பாதி, ஆள் பாதி என்பது மெய்! மெய்யில் நிலைத்த உடுப்புகளில் அவர் மாப்பிள்ளை போலத் தோன்றி மாப்பிள்ளையாக மாடிப்படிகளைக் கடந்தார். ஆஹா! அவரது நடையில்தான் எத்துணை துள்ளல், மிடுக்கு, காம்பீர்யம் ! ... டாக்டர் யாரோ உள்ளே துழையக் கண்டார். மருந்து எப்படி இருக்கும் ? நோய் எப்படியிருக்கும் ?... கீழ்த்தளத்தில் வந்து நின்றார் அவர்.