பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விதியின் வீதிக்கு நிகரான சூட்சுமத்துடனும் பண்புடனும் கடை வீதி விளங்கியது. திருவாளர் சிற்றம்பலம் காரிலிருந்து விசையுடன் இறங்கினார். விசையுடன் வந்து நின்ற காரல்லவா? அதனால்தான் அவ்வாறு இறங்கியிருக்க வேண்டுமா ?... அவசரத்தின் துணை எனில், மனிதப் பிண்டத்திற்கு எப்போதுமே ஒரு நாட்டம், ஒர் ஒட்டுறவு !... சிற்றம்பலம் எப்போதுமே ஆர அமரத்தான் எதையும் செய்வார். இந்நிலை, பிறவிப்பயனல்ல. சுவாமி விவேகானந்தரின் சில தத்துவங்கள் அவருக்குப் பிடித்தன. அதன் பலனான விதிபோல, அவருக்கு இம்மானுடப் பிற வியிலே ஒரு சுவை கனிந்தது. "அரிது அரிது...மானிட ராய்ப் பிறத்தல் அரிது ' என்ற உண்மைக் கோட்பாட் டின் உள்வட்டமாக அவர் இயங்கி, அல்லது இயக்கப் பட்டு, அச்சுழற்சியின் யந்திரகதியில், அவரே தனக்குத் தானே ஒரு கோட்பாடாகவும் விளங்கினார். ஆரோக்கி யத்தின் ரகசியமாக-வாழ்வின் சமநிலைத் திட்பமாக அவர் தோன்றினார். . . "இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்பு களும், எதனாலும் தடுக்க முடியாத அளவற்ற சக்தியும் வாய்ந்தவர்களே நாட்டின் பாதுகாப்புக்குத் தேவை !’ என்ற சுவாமி விவேகாநந்தரின் உண்மைக் கூற்றுக்கள் அவருள் ஒரு புரட்சியாக உருப்பெற்றது. அப்புரட்சி யின் பலனாக, அவரது சோனி உடல் வல்லமை எய்தி, ஆண்மையின் வீர்யம் மிகுந்து விளங்கியது. வறுமை