பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அவருள் செய்த தொண்டினை உதறி விட்டு, அவர் நாட்டுக்கு தொண்டு இயற்ற முனைந்தார். அம் முனைப்பைப் பின்னுக்கு இழுத்தது தரித்திரம். எனவே, காடுகளுக்குப் போய் தவம் செய்து, இந்த நல்குரவுக்குப் பாடம் போதிக்கத் திட்டமிட்டார். அது தருணம் யதேச்சையாக நிழலுக்கு ஒதுங்கினர். தாகத்திற்கு தண்ணிர் கொடுத்தாள் சாரதா. அவளே அவருக்கு வாழ்வின் நிழலானாள் ; வாழ்வின் வளப்பக்கத்துக்கு நீர் ஊற்றும் சீதேவி ஆனாள்.நீரினின்றும் நீர் பிரியமாட்டாத பாந்தவ்யம் ! பாசம் ! எதிர்பாராத முடிவிலே எதிர்பாராத ஆரம்பம் உதயமானது. . .

    • g Tair வாழ்வே ஒரு கதையாட்டந்தான் இருக்குது !...'

மனைமாட்சியும் நன்மக்கட் பேறும் கிட்டின. அவர் செய்து வந்த பிரார்த்தனைகளின் விளைவு நல்ல பலன் சொல்லி வந்தன. தடம் என்றால் திருப்பம் இருந்துதானே தீர வேண்டும் !' - வந்த திருப்பம் சாரதாவை விழுங்கி விட்டது !... முழுக்கைச் சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு குறுக்கு மறித்து நடந்தார். மஸ்லின் வேஷ்டியின் ஒரு பகுதியை வலக்கை முனையை விரலால் நீவி விட்டப்படி நடந்தார். - அதோ, லஸ் முனை. ‘சாரதா ஸில்க் பாலஸ்' என்னும் கடையின் வாசற் படியில் ஏறினார். கல்லாவில் அமர்ந்திருந்த இளைஞன்,