பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 00 சிற்றம்பலம் பெற்ற பிள்ளை-சாரதா பெற்ற பிள்ளை. எழுந்தான். அவர் குந்தினார். நாகரிகம் சூடு பிடிக்கும் நேரம் அது. பொழுது அணைந்து கொண்டிருந்தது. வெயிலின் சூடு இறங்கி விட்டது. தேதி காலம். பெண்டுகள் ஏறி இறங்கினர். ரோக்காக்கள் கிழிக்கப்பட்டன. ரூபாய்த் தாள்கள் உள் அறையில் பதுங்கின. ஒருத்தி, கட்டுக்கழுத்தி. கையில் காஞ்சீபுரம் பட்டு வைத்திருந்தாள். வாடாமல்லி நிறத்தில் உடல்; மயில் கழுத்து பார்டர். ஒரு நினைவுச் சிதறல், லகான் அறுபட்ட குதிரையாக அவர் நெஞ்சு குதித்தது. மகிழ்வின் குழந்தையாக நின்ற தருணம், மணப் பெண் சாரதாவுக்கு வாங்கியிருந்த புடவையும் இதே அச்சுத்தான். 'என் சாரதாவுக்கு அப்போது இந்தப் புடவையைப் பார்த்ததும் உண்டான சந்தோஷம் இவ் வளவு அவ்வளவல்ல ! ...ம்! ... புடவையை வாங்கிக் கொண்டுபோய் விட்டாள் அந்த அம்மணி. சாரதா தன் புடவையை எனக்கு நினைவுச் சின்னமாகக் கொடுத்து விட்டுப் போய் விட்டாளே!... கடிவாளம் மாட்டப் பட்ட புரவியாக அழுதது அவர் மனம். கூட்டம் நெரித்தது. -