பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ ஆன்மீக பல த் தை ஆசனமாக்கி அமர்ந்தபடி நேயம் கலந்த உருவத்தையும் நி ைன வு கடந்த ஈடு பாட்டையும் பக்தியாக்கிக் கைதொழுது, எதிர்முகமாக நின்ற ஈசனை அழைத்துப் பிரார்த்திக் கொண்டி ருந்தார் சிற்றம்பலம் அவர்கள். அப்பிரார்த்தனை ஊனை யும் உயிரையும் உருக்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால்தான், கண்ணிர் அப்படிப்பெருகி வழிந்ததோ ? ஆம் கண்ணிர் இல்லையேல், சிரிப்புக்குரிய பங்கு மகத்துவம் மனிதனுக்குப் புரியவே புரியாது போலும்! கண்ணிரின் ஒரு பகுதியை அனுபவித்தவருக்குச் சிரிப்பின் மறுபகுதியே தன்னாலேயே கிடைத்தது. நிழலற்றுத் திரிந்தவரே பலருக்கு நிழலானார். அன்று. இவருக்கும் நிழல் ஈந்த புண்ணியவதியோ இன்று நிழ லுருவரும் பெற்று விட்டாள் பூசனை முற்றுப் பெற்றது. அவர் கதவுகளை நன்றாகத் திறந்துவிட்டார். பூந் தென்றல் மிதந்தது. கன்னங்களில் உவர்க்கோடிட்டுக் கிடந்த கண்ணிரை அது போக்கியது. அமைதி பூத் திருந்தது, மனத்திடை விண்ணிடை பூத்திருந்த நட்சத் திரப் பூக்களின் ஒளிச் சுகந்தத்தையும் அவர் அனுப விக்கத் தெரிந்தவர். - - வழக்கம்ாக நெளியும் ஓர் ஆவல் உந்தியது. நடந்தார். மாடி ஹாலிலே அலங்கரிக்கப் பட்டிருந்த படங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, அப்புறம் அந்த ஒரு போட்டோவை மாத்திரம் எம்பி எடுத்தார்.