பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 அன்னக்கிளிக்கு வெட்கம் வந்து விட்டது, வெட்கம் கருங்காணி வீட்டுக் கடலைக் கொல்லி அலுவலுக்கு ஒங்க குடிக்கு உண்டான அச்சார ஈவு வந்திடுச்சாடி, செல்லி ?' என்று அவசரமான ஆவலுடன் கேட்டாள் செல்லிக்கு இருதயத்தில் நெஞ்சி குத்தினமாதிரி ஓர் உணர்வு வலித்தது, உதட்டைப் பிதுக்கியதோடு சரி : வாய் திறந்தால், முத்துக்கள் உதிர்ந்துவிடுமோ ? அன்னத்திற்குக் காசுதான் கடவுள். ஆனால், கடவுளும் உள்ளங்கைப் பிடிக்குள் அடங்கி விடுகிறாரே! பாவம் ! செல்லி நிமிர்ந்தாள், கொட்டுச் சத்தம் கேட்டதும், திடுக்கிட்டாள் தொடர்பு அறுந்து கேட்டபறையொலி யில். தாளக்கட்டு தவறியிருந்தது கைகளிலே துறுதுறு' வென்று ஊறல் கிளர்ந்தது. யார்னா அவன் கட்டுக் கணக்கு வைக்காமல், மனம்போன போக்குக்குக் கொட்டுக் கொட்டுறவன்? குற்றத்திற்குரியவன் ஒரு வேளை சின்னப் பிள்ளை மூக்கனாக இருக்கலாம் அல்லவா ? ஒரு செய்தி நினைவில் பிசிறு தட்டியது. மகளே செல்லித் தங்கம்! ஒனக்குக் கண்ணாலம் காட்சின்னு ஒண்னு ஆத்தா புண்ணியத்திலே நல்லதனமாய் நடந்து, அந்த நிம்மதி யோட ஆடி அடங்கி நான் கண்ணை மூடுறத்துக்குப் பொசிப்பு வச்சிக் கொடுத்தும் வச்சிருந்தேன்னா, நான் மெய்யாலுமே மகராசியேதான். நம்ம சாதிசனக்கட்டு கொட்டு முழக்க, எம்மாப்பிள்ளைத் தங்கம் தீப்பந்தம் புடிச்சுக் கொள்ளி வைக்க, ஆண் குஞ்சு லவிக்காத குறை மேலுக்குத் தெரியாமல் எங்கதையான கதையும் ஒரு பாடாய் முடிஞ்சிடுமே ? - செல்லியின் கோலமதர் வழிகள் பொடிக்கின்றன. மனத்தில் மாயமாய் எதிரொலி கிளப்பியவாறு இருந்த தப்புச் சத்தத்தின் ஊடாக, அவள் காதுகளைத் தீட்டிக் கொண்டு உன்னிப்பாகக் கவனித்த