பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 மாச்சே ?. மனிதன் உடம்பை வளர்க்கப்படாது ; அதை வலுப்படுத்தத்தான் வேணும் !. நான் கொடுத்த புஸ்தங் களைப் படித்தாயா ?...” இப்போது சுவாமி விவேகாநந்தரின் சிந்தனைகளைப் படிச்சுக்கிட்டிருக்கேன். ஞானத் துறவிப் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆனாலும், பெண்களைப் பத்தி ரொம்ப மதிப்பும் அனுதாபமும் பாசமும் வச்சுக்கிட்டே ஒவ் வொரு சொல்லையும் சொல்லியிருக்காங்க !...” 'எஸ்.எஸ்... எனக்கு ரொம்பச் சந்தோஷம் ... நீ சுவாமிஜியை ரொம்பத் தெளிவாகப் புரிஞ்சுக்கிட்டு வார தாவே நான் நினைக்கிறேன் !...”

  • *

எல்லாம் உங்களோட பயிற்சி !... அவர் சிரித்தார். முத்துப் பற்கள் வெகு நாகரிகமாக அழகு சிந்திக் காட்டின. அவளுடைய எழிலுக்கு உகந்த அமுதச் சிரிப்பின் காந்தக் கவர்ச்சியின் மகிமைக்குக் கேட்கவாவேண்டும்?. ராணி மெல்ல இருமினாள். சிணுங்கல் இருமல். சிற்றம்பலம் பதறிப் போனார். உயிர்க் கழுவை யாரோ திருடுவதுபோல துடித்தார். **тталії, என்னம்மா இது டாக்டரை அழைக்கட்டா ?. எனக்கு வைத்திருக்கிற பாலை நீ குடியம்மா ... கொஞ்சம்மஞ்சள் பொடியைத் தூவிச் சாப்பிடு !.. இவ்வளவு சின்ன வயசி லேயே உடம்பை அசட்டை செய்யப் பழகுகிறது தப்பு. ம்...என்னைப் பார்!... வருகிற மாசம் எனக்கு எழுபத் திரண்டாவது வருஷம் பிறந்த நாள் வரப் போகுது!... பாரேன் என்னை மைனர் மாதிரி சிரிப்பின் கம்பீரத் தில், இத்தனை தொலைவுக் கற்களைக் கடந்துவிட்ட அயர்வு உள்வாங்கிவிட்டது.