பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஞானபண்டிதனுக்கு ஞானப் பாலைப் பற்றித் துளியும் தெரியமாட்டாது. அவன் கைக் குழந்தை. அவனுக்குத் தன் அன்னையின் முலைப்பால் பற்றியே அறிவான். பாலமுதம் அருந்திய குதூகலத்திலே தவிழ்ந்து விளையாடினான். படுசுட்டி!... அப்போதுதான் யோகாசனப் பயிற்சிகளை நிறை வேற்றிவிட்டு, காற்றாட பங்களாவின் லான்’ பகுதிக்கு வந்தார் சிற்றம்பலம். காலை இளங்காற்று இதமாக வீசியது. மேலை நாட்டு வண்ணப் பூக்கள் வகை பிரித்துச் சிரித்தன. மகிழம் பூக்களின் மணம் எடுப்பாக வீசியது. முழுநேரக் கச்சேரியிலே அனைவரது அமோகமான பாராட்டுதலையும் பெற்றுவிட்ட ஓர் அபூர்வ ராகம் போல! - குழந்தை முன்புறப் பூங்காவுக்கு வந்துவிட்டது. வேர்வையை துண்டுகொண்டு ஆற்றியபடி, சிரிப் பின் வழியிலே தடம் ஒற்றி நடந்து, சிரிப்புக்குச் சிரிப் பையே பரிசிலாகக் கொடுத்து, குழவியை எடுத்துத் தோளில் சாய்துக் கொண்டார். மணிபாலன் டீக்காக உடுத்துக்கொண்டு வந்து நின்றான். தம்பியை அழைத்துவர விமான நிலையத் துக்குப் போகப் போகின்றான்! சிற்றம்பலம் அங்கியிருந்தபடியே ராணியை அலட் டினார். ராணி கவரிமானென ஓடிவந்து மறுகி நின்றாள். மணிபாலனைக் கண்டதும் அவள் மெளனம் அமைந்து