பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 வைத்த மகனை வரவேற்று ஆரத்தி எடுத்து திருநீறு பூசி வாழ்த்த அன்னை இல்லை !' என்ற நிர்ணயிக்கப்பட்டு விட்ட யதார்த்தத்தின் உண்மையை இதயத்தின் உள் மயமான உணர்வு அறிவித்தபோது, அவர் கலங்கிப் போனார். ஈரத்துண்டில் ஈரம் சேர்ந்தது. மாடியில் அவரது தனி அறையில் நறுவிசான ஒப் பனையுடன் உட்கார்ந்திருந்தார் சிற்றம்பலம். சந்தனப் பொட்டும் ஜவ்வாது பொட்டும் குலுங்கின : மனத்தன. புத்தர் சிலைக்கடியில் அவரது குளர்ச்சிக் கண்ணாடி காட்சி பொருளானது. ராணி வந்தாள். காலைச் சிற்றுண்டி வந்தது. இடியாப்பம், புதினா துகையல், அசல் உருக்கு நெய். ருசியில் திளைத்தது நாக்கு. 'இன்னும் கொஞ்சம்...' "ம்... உன் மாமூல் உபசரணை... நடக்கட்டும் !...” மெல்லிய நகைப்பொலி அரவம் காட்டியது. ஊஹூம் அரவமன்று !... அவர் அவளைப் பார்த்தார். மதுக்குடம் ஏந்தி நின்ற மணமலராய்ப் பொலிவுற்று நின்றாள் அவள். இனக் கவர்ச்சி குரலெடுத்துப் பாடாத பகுதி இல்லை ... வசந்தம் புறப்பட்டதா ?