பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13 இரண்டாங்கட்டில் வந்தமர்ந்தார் சிற்றம்பலம். கையில் மணிமாறன் வைத்திருந்த கூலிங்க்ளாஸ்' துப்புரவான அந்தம் பெற்று விளங்கிற்று. உடுப்புகள் எடுப்பாக இருந்தன. பெர்லினினும் ஹெடில்பர்கிலுமாக படித்த நுட்பங்களை விவரித்தான். ரொட்டி டின்கள் சில தலைநீட்டின. குழந்தைகள் தலைநீட்ட அட்டியில்லை. முதல் டின்னைத் திறந்து முதல் ரொட்டியை அப்பாவிடம் மரியாதையுடனும் பாசத்துடனும் நீட்டினான் மணி மாறன. - அவர் வாங்கிக் கொண்டார், உணர்ச்சிப் பெருக் குடன், என் பிள்ளை தருகிறான்... கொடுத்து வாங்குகிற தத்துவம் பெரிய அர்த்தம் கொண்டதல்லவா? 'இன்னொன்று கொடு!...” என்று கேட்டார் சிற் றம்பலம். - அவனோ ஒரு ரொட்டிப் பெட்டியாகவே கொடுத் தான். "ஆல்ரைட்!... மிச்சத்தை எல்லாருக்கும் பகிர்ந்து கொடு... என்று சொல்லிக் கொண்டே, ராணி!” என்று குரல் கொடுத்தார். ராணி குனிந்த தலை நிமிராமல் வந்தாள். நெற்றித் திலகம் நேர்த்தி. அவளிடம் பிஸ்கட் டின்னைச் சமர்ப்பித்தார் அவர். அவள் பதவிசுடன் கை ஏந்திப் பெற்றுக் கொண்டாள். - 'தம்பி, இவள் பெயர் ராணி!... உங்க அம்மா போனதுக்கப்புறம் இந்தச் சின்னப் பெண்தான் என்னை கவனிச்சுக்கிட்டு வருது! ம்!” வி-8 -