பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நேரத்தில், அந்தப் பயங்கரச் சத்தம் ஓய்ந்திருந்த அதிபயத்தை உணர்ந்ததுதான் தாமதம் ; மரணத்தின் ஒர் அமைதியை அடைந்தாள் செல்லி. நினைவில் நின்ற தாய் நெஞ்சில் நின்றாள் எமன் ஏமாந்தாலும் சரி, ஏமாறாட்டியும் சரி, ஒனக்கு ஆயுசு நூறுதான், ஆத்தா ! எண்ணங்கள் மாத்திரம் சிலிர்க்கவில்லை. - 'மகளே, செல்லிப்பொண்ணு ' "ஆத்தாளா ?... வந்திட்டியா, ஆத்தா ?” பாசமும் பாசமும் கூடிப் பிடித்து விளையாடின. பெற்றவளின் காலடியில் கிடந்த சாக்கு முடிச்சை 'கைலாகு கொடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள் மகள். நெல் சுமக்கவில்லை. ஆகவேதான் பசியும் சுமை கழித்து விட்டது போலும் ! கஞ்சி குடிச்சியாடி, ஆத்தா ?” "ஊகூம் !" “சமைஞ்ச பொண்ணு இம்மாம் நேரத்துக்கு வயித் தைக் காயப் போட்டுக்கிட்டுக் குந்தியிருக்கலாமாடி மகளே ? ... குளமங்கலத்தை நாடிப் பிறயிறப்பவே ஒங்கிட்டக்கப் படிச்சுப் படிச்சுச் செப்பினேனேடி, ஆத்தானே ? மங்காத்தாக் கிழவிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ; கண்கள் கலங்கியிருந்தன, மகளுடைய பசியில் அவள் தன் பசியை அடியோடு மறந்துவிட்டிருக்க வேண்டும். . செல்லி நமட்டுப் புன்னகை செய்தாள். 'ஆத்தா ஒரு வேளைக்குக் கஞ்சி குடிக்காட்டி, எம்புட்டு மேனி ஒண்னும் கட்டுவிட்டுப் பூடாது; பானையிலே கிடந்ததோ தாலு கொத்துத்தான். நான் ஒண்டியுமா ஒரே மூச்சிலே