பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 மானதோ, பெண்மை பெண் இனத்தில் எனப் போற்றப் படுவது எதுவோ, அதற்குப்பெயர் சீதை !' என்ற உண்மைகள் பிரகடனப்படுத்தப்பட்டவையாக பளிச் சிட்டன. அவ்வரிகளைப் படித்தபோது, அவன் விழிகள் கலங்கின. அவன் ராணியைப் பார்த்தான். “உங்களைப் பற்றி கொஞ்சம் நான் அறியலாமா ?” என்று கேட்டான் அவன். "கொஞ்சம்தான் சொல்ல வேண்டியது உள்ளது. உங்கள் அப்பாவை பார்க்கும்வரை அனாதையாக இருந்த அபலை நான். இன்று எனக்கு ஒரு நிழல் இருக்கிறது. நாளை எனக்கு ஒரு வாழ்வு கிட்டி விடும் !...” தன்னம் பிக்கையின் சுடர் மெளனப் புன்னகை புரிந்தது. அந்தி வானத்தின் விந்தைகள் சொல்லில் அடங்கி விடுமா ? பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்ச வந்தான் தோட்டக் காரன். - - 'உள்ளே போகலாம் !' அவன் முன்னே சென்றான். அவள் மாடிப்படியில் கால்வைத்த நேரத்தில், அவன் அவளிடம் ஒர் அழகிய பட்டுச் சோளித் துணியைக் கொடுத்தான். - வேண்டாம். ஐயா கொடுத்தது நிரம்ப இருக்கு ' அச்சம் விழி பிதுங்கியது. -