பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 "பரவாயில்லை. இதையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தன்மையை நான் ரொம்பவும் போற்றுகிறேன்... என் அன்புக்கு ஒரு அடையாளம் இது !... - 'அடையாளம் என்ற ஒன்று இருந்துவிட்டால், அப்பால் அது அன்பாக எப்படிங்க இருக்க முடியும் ?... பிரதிபலளை எதிர்பார்க்கும் ஒரு உபகாரம் ஆகி விடாதா ?” இருவரும் உரையாடிய சமயம், பேஷ் ' என்ற பேச்சொலி சிரிப்புக் கலந்து கேட்டது. அங்கே ரீமான் சிற்றம்பலம் நிச்சலனமாக நின்றார். வாங்கிக்க ராணி ' என்றார், குரலில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தெளிந்த நிதானம் பிறழவில்லை. ராணியின் பூங்கரங்களிலே இப்போது அந்தப் பட்டுத் துணி இருந்தது. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த ஊரான அலம் எனும் நகரில் அம்மேதையின் இல்லத்தைத் தரிசித்துத் திரும்புகையில் வாங்கப்பட்ட இந்தப் பட்டின் நினைவை மணிமாறனால் மறக்க வாய்க்காது. அதேபோல, அப்பட்டு அண்டிய இடத்தின் இந் நினைவையும் மறக்க மாட்டான் !