பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 6 வாக்கிங்' போய்த் திரும்பினார் சாரதா ஸில்க் பாலஸ் முதலாளி. தெரு விளக்குகள் எரிந்தன. நீராடினார். நீறு பூசினார். பூஜையை நிறைவுபெறச் செய்தார். மாலைப் பதிப்புச் செய்தித்தாள் வந்திருந் தது. புரட்டினார் ஐம்பத்துநாலு வயசு சினிமா நடிகர் ஒருவர், தான் பார்க்க சின்னக் குழந்தையாக இருந்தவள் இப்போது தன்னுடன் கதாநாயகியாக நடித்திருப்பதைப் பற்றிப் பிரமாதமாக அளந்திருந்த செய்தியை அளவுகட்டிப் பிரசுரித்திருந்தார்கள். சிற்றம்பலம் உள்ளுக்குள்ளே நகைத்துக்கொண் டார். தமிழ் நாட்டிலே எதற்கும் ஒரு ஆச்சரியக் குறி தான்! " எந்த ஒன்றிற்கு முற்றுப்புள்ளி இட்டு முடிக்க ஒப்பாதவர் சிற்றம்பலம். மனிதனை இயக்கும் ஒரு கருவியே தெய்வமும் வினையும், ஆகவே எந்த ஒன்றும் இந்த ஒரு முடிவைத்தான் எய்துமென்று முன்னதாகவே நிர்ணயம் செய்துவிட்டு, அதன்பின் தெய்வத்தின் பேரில் பழி போட்டுவிட்டுச் சும்மா இருப்பது தர்மமாகாது என்கிற கருத்து உடையவர் அவர். சாரதாவின் உயிர் தொண்டைக்கும் வாயிக்குமாக இழுத்துக்கொண்டிருந்தது. சிற்றம்பலம் சின்னப் பிள்ளை மாதிரி விம்மி வெடித் துக் கொண்டிருந்தார். தன் இன்னுயிரின் மறுபாதி அவ்வளவு சுளுவாக-அத்துணை சீக்கிரமாக தன்னிட