பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மிருந்து பிரிந்துவிட அவர் ஒப்பவில்லை. பட்டணத்தில் உள்ள பல பெரிய டாக்டர்களைக் கலந்தார். தெய்வத் தையும் துணைக்கழைத்தார். ஒருவர் சொன்ன ஒரு நூதனக் கண்டுபிடிப்பு மருந்து பயன் தந்தது. என்றாே பேய்விடுமென்று எல்லோரும் எதிர்ப்பார்த்த அவ்வுயிர் அதற்கப்புறம் பதினைந்து தினங்கள் 'ஜம்'மென்று உடற் கூட்டில் ஒட்டியிருந்தது. அவளுடன் வாழ்வு நடத்திய நாற்பத்திரண்டு வருஷங்களிலே ஒரு முழு நாள் என்பதாக அவளைவிட்டு அவர் இருந்ததில்லை. அப்படிப்பட்ட நெருக்கத்தின் மகிமையை பின்னும் அனுபவிக்கஉணர-மகிழ அவருக்கு மீண்டும் ஒரு பதினைந்து நாட்கள்-அல்ல, பதினைந்து யுகங்கள் கிட்டின. மண்ணுக்கும் விண்ணுக்குமாகக் குதித்துவிட்டார் அவர். அடுத்ததாக ஒரு ನಿಣ೯T) சிலும்பியது. செம்மறிக் கடா மாதிரி. - - ஞாபகம் வைத்துப் போற்றத்தக்த ஒரு ஞாபகமாக அது உணர்வு காட்டியது. கண்ணிரில் கனத்த கபாலம் இனி இறங்கிவிடலாமா ? - "ராணி !' சாரதா கண்களை மூடிக் கொள்வதற்குக் கச்சிதமாக முதல் நாள் ராணி வந்தாள் ஒரு புதினத்தின் ஓர் அத்தியாயம் முடிந்து மறு அத்தியாயம் ஆரம்பமாகும் கதை. . . . . . மனைவியின் உடல் நலம் காரணமாக மனம் நலிந் திருந்த சிற்றம்பலம் கோடம்டிவாக்கம்வரை இரட்டை மிதித்துக்கொண்டு நடந்தார். பரந்து அகன்றிருந்த மார்பு மெல்லிய காற்றின் ஸ்பரிச சுகத்தில் லேசாக சுகம் காண முடிந்தது. நோக்கமில்லாத நடை. சாரதாவின்