பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இப்போது தம்மைத்தாமே ஒரு முறை நோக்கிக் கொண்டார். தமக்குத்தாமே சிந்தித்துக்கொண்டார். கற்பு நிலை என்பது ஆணுக்கும் இருக்கவேண்டும். என் வரை இப்பண்பிலே நான் நீதியுடன் நடந்துவிட்டேன். என் சாரதா தான் என் நீதி .' திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் வழிமறித்துக் கிடந்தாள் ராணி. விழியை வழியாக்கிப் பார்த்தார் சிற்றம்பலம். பருவத்தின் முதல் வாசலை மிதித்திருந்த நேரத்தில், அவள் ஏன் இப்படி ஆகிவிட்டாள். ஒடிய டாக்ஸியை அழைத்து, ராணியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனைகள் நடந்தன். நஞ்சு சாப்பிட்டிருக்கிறாள் ராணி. அழகின் ராணிக்கு இப்படி ஒர் அவகேடு ஏன்?... பொறியைக் கலக்கி விதி விளையாடலாமோ ? ஒர் இங் கிதம் வேண்டாமா ? இங்கிதமின்றி நடந்துவிட்ட பேய் உலகிலேருந்து விடுதலை பெற முடிவு கட்டியிருக் கின்றாள் ! - எப்படியோ, ராணி மறுபிறவி கொண்டு எழுந்தாள். என் பசியையும் என் அழகையும் துஷ்பிரயோகம் செய் தாள் ஒரு அரக்கி. என்னையுமறியாமல் என் மானத் தைப் பறிகொடுத்தேன். என்னை ஏன் காப்பாற்றினீர் கள் ?-அவள் புலம்பினாள். விஷயம் இதுவே. அவள் அழுத பாஷை நீளம் !... - வாழவேண்டுமென்கிற தத்துவத்தின் கடமைப் பண்பாட்டில் அவதாரம் செய்த மனிதப் பிறப்புக்கு, தன் போக்குப்படி சாவதற்கு அனுமதியே கிடையாது என்ற தம் சிந்தாந்தத்தை-ஏட்டளவில் எழுதப்பட்ட