பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மற்றவருக்குத் துறவுதான் விதி. அவரவர் மதச்சார்பு அப்படி, மணிமாறன் அனைவரையும் வரவேற்றான். ஜனாப் முகமது ராவுத்தர் வியாபாரக் கூட்டாளி அவர் வந்தார். பரிசு டப்பா ஒன்றை ஒர் எடுபிடி சுமந்து வந்தான். சிற்றம்பலம் மறுத்தார். ஜனாப் கடைசிப் பட்சமாக, சட்டைப் பையிலிருந்து ஒரு சிறந்த செண்ட் சீசாவை எடுத்து, அதை எழுபத் திரண்டு வயசு இளவட்டத்தின், ஜிப்பாவில் நெடுக பூசினார். நெடி, நெடிதுயர்ந்து பரவியது. இசை நிகழ்ச்சியொன்று தொடங்கியது. அப்போது, ராணி புது உடை திகழ, கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்து, சிற்றம்பலத்தை நெருங்கி வந்தாள். அதற்கு, மணிமாறன் நிரம்ப உதவினான். வந்த ராணி, சோளியின் உட்புறமிருந்த ஒர் உறையை எடுத்து அதைச் சிற்றம்பலத்தின் கைகளில் பணிவுடன் தொட்டு வைத்தாள். அவரது செந்நிறப் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். சிற்றம்பலத்தின் கையிலிருந்த உறை கழன்றது. 'மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுள் தரும்படி எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு, வேலைக்காரி ராணி.