பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கிழவி மங்கத்தாவுக்கு வாயெல்லாம் சிரிப்பு; வாயெல்லாம் பல்லாக இருந்த காலம் ஒன்று இருக்கத் தான் இருந்தது , இப்போது எல்லாம் ஆண்டு மாறிப் போயிற்று ; ஆகவே, வாயெல்லாம் சிரிப்பு. அம்மட்டில் அவளுக்கு ஒர் ஆறுதல் தான் :- "எந்த ஒரு சங்கதி யாகட்டுமே, அது, ஆத்தா மூத்தவ விதிக்கிறபடியே தான் நடக்க வாய்க்குமாக்கும்!... முதலாளி மகன் சின்ன முதலாளி அவள் பார்வையிலே ஆலவட்டம் சுழலத் தொடங்கினான் பாசம் சிலிர்க்கிறது: கிழவி மங்காத்தா வாயெல்லாம் சிரிப்புடன் வேக மாக நடை தொடர்ந்தாள். முதலாளி மகனை வரவேற்க வேண்டாமா?- "ஆண்டே, கும்பிடுறேனுங்க,' என்றாள். குரவிலே மரியாதை மட்டுமல்ல, அச்சமும் இழையோடி யது. பல் போய்விட்டால், சொல்லுமா தேசாந்தரம்' போய்விடும் ? ‘ஊம் கொட்டினான் இளவட்டம், அவனுடைய கள்ள விழிப்பார்வை அப்போது கன்னிப்பூவைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. ஒடு கம்மாயிலிருந்து லாந்தி) பிடிக்கப்பட்ட விறால் மீன் கரையில் நழுவி வீழ்ந்த சடுதியில் அழகு காட்டித் துள்ளுமே, அப்படிப்பட்ட பாவனையில், வீரபணியின் பாவனை முழுமையும் ஒரே துள்ளல் வடிவில் விளங்கியது. சிரிப்புத் துள்ளியது ; பார்வையும் கூடத்தான் செல்லிக்குட்டி '-உயிரும் உயிர்ப்புமாகி, கண்ணா மூச்சி விளையாடுகிறாள் ! "செல்லிக்கு நாணம் பிடிபடவில்லை கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் ; மாரகச்சுங்கடி சீரானது: