பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 திருவாளர் சிற்றம்பலம் அவர்கள் ராணியைத் தன் உடைமை ஆக்கிக் கொண்டார் முறைப்படி. அதன் விளைபலனாகக் குடும்பத்தில் பூத்த பூசல் களுக்குச் சட்டப்படி வழிதேடினார். தான் சம்பாதித்த சொத்துக்களில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு வைத்துக்கொண்டு, மிகுதியைப் பிள்ளைகளுக்கும் பெண் களுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்தார். ஒவ்வொரு வருக்கும் தனித் தனி வீடு. இந்தப் பங்களாவை இவரே வைத்துக் கெண்டார். அப்பாவின் குணத்தை அறிந்த பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இன்னும் ஒருபடி மேலாக அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை விதி அமைத்தது. 'இப்போ என்னை என் மக்கள் மட்டுமில்லை, ஊர் உலகமும்கூட ரொம்ப அப்பட்டமாக புரிஞ்சுகிட் டிருக்கும் !' என்ற வீரச் சொற்களை முடிவுரையாக்கி மற்றவர்களைக் கதிகலங்கி ஒடச் செய்துவிட்டு அவர் வழக்கம் போல எவ்விதமான சலனமும் இன்றித் தம் முடைய தனியறையில் உட்கார்ந்தார். சாரதாவின் படத்தின் கீழ் நின்று, 'கண்ணே சாரதா ! நீ தான் என்வரை உண்மை மற்றதெல்லாம் பொய். உலகத் தைப் பற்றி நீ செவி சாய்க்காதே. அது ஒரு பைத்தியம்' என்று சொல்லி நிறுத்தினார், அப்புறமும் தொடர்ந்து, சாரதா டியர் !... என்னைப் பாதுகாக்க நீ முன்பு என் நிழலாக இயங்கினாய். இப்போது உன் மன விருப்பப்படியே ராணி வந்திருக் கிறாள். அது அவள் கடமையாம், சொல்கிறாய்!...உன்