பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 மரணப்படுக்கையில், என்னை அவள் கைகளில் நீ ஒப்ப டைத்துப் போவதாகச் சொன்னாயல்லவா : அந்த ஒரு வாக்கையே வேதவாக்காக மதித்து என்னை தன் கைப் பிடியில் அமர்த்திக் கொண்டுவிட்டாள் ராணி அதிசய மாகத் தான் இருக்கிறது. நேற்றுவரை நானே கனவி லும் நினைத்திராத எதிர்பார்த்திராத ஒரு முடிவு, சாரதா...இது! நான் நாளை ஒரு கதை ஆகப்போகின் றவன். அவளோ இன்றே ஒரு கதை ஆகிவிட்டாள் சாரதா, நீ இனி நிம்மதியாக இரு. ஏன் தெரியுமா? நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். ஆமாம்! நான் இனி நிம்மதியுடன் இருப்பேன். ஆகவே, நம் ராணியும் இனி நிம்மதியுடன் இருப்பாள் !...மாயப் பிறப் பறுக்க வேண்டுவார்கள். எனக்கு அம்முடிவு வேண்டவே வேண்டாம் ! நீயும் ராணியும் எனக்கென இருக்கையில், இனி நான் எத்தனை காலம் வேண்டுமென்றாலும், வாழக் கடமைப் பட்டவனாயிற்றே! ஒன்றுமட்டும் உண்மை. நம் ராணி இருக்கிறாளே ராணி, அவள்தான் மெய்யான தியாகச் சுடர் ஆனால் அதிசயம் என்னவென்று கேளேன்...அவள் என்னைத்தான் பெரிய தியாகி என்று புகழ்கிறாள்! சாரதா!... நீ சொல் உனக்குத் தெரியும் என்னை. எப்படியோ ராணியின் ஆசையைப் பூர்த்தி செய்து விட்டேன். ஆமாம் : அட்டியில்லை. நான் மனி தனாக-மனிதனாகவ்ே இருந்துவிட்டேன்! உனக்குப் புரி யாதா என் உள்ளம், பேச்சு?... சாரதா!...நீ தேவதை : இல்லையென்றால், நீ திரும்பி வந்து என்னை ஆட்கொள் வாயா?...' என்று தமக்குத்தாமே பேசிக் கொண் டிருந்தார் அவர். தமக்குத்தாமே நம்பி, அந் நம்பு தலையே ஓர் இலட்சியமாகக் கொண்டு, இந்த இலட் சியத்தை வாழ வைத்துவிட்ட அமைதியில் சிந்தை தெளிந்த கனிவுடன் நல்ல மூச்சுவிட்டு, நல்ல சிரிப்பை உதிர்த்தார் அவர். அவரது விழிவரம்புத் துளிகளை ராணி துடைத் தாள.