பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அவளது கண்ணிரைத் துடைக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. நாட்குறிப்பின் அன்றையத் தேதியிட்ட தாளில் சிற்றம்பலம் கீழ்க் கண்டவாறு குறிப்புக்களை எழுதி யிருந்தார். "ஈசனே!. சோதனைகள் இல்லையென்றால் உன் சுயரூபம் தெரியாதா எனக்கு?... எனக்கு நான்தான் எல்லாம். இது முதல் அங்கீகாரம். அப்புறம்தான் என்னை இத்தனை காலமாகக் கட்டிக் காத்தது. இனி... இனிமேல்... உன் சோதனை என்பேரிலே விளையாடத் தொடங்கி விடும்!... என் ராணியை நீ அறிவாய். அவள் இருபது வயதுப்பெண். அவளது மங்கல நாணைக் காக்கும் பொறுப்பில் இப்போது உனக்குத்தான் பெ ரும் பங்கு வந்து விட்டிருக்கிறது!... என்னுடைய சாரதாவைக் காப்பாற்று!... தெய்வமே!... என்ரானிக்கு மாறாத சிரிப்பையும் மாற்ற முடியாத நெஞ்சுரத்தையும் அருள்!... என்னை நீ அறிவாய். எல்லாம் கடந்தவன் நான் ; எல்லாம் கொண்டவனும் நான்தான்!...”