பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தேறலின்றெளிவே சிவபெருமானே, திருப்பெருந்துறையுறை சிவனே, பீறிலாப்பதங்களி யாவையுங் கடந்த இன்பமே யென் னுடையன்பே !' அதே நேரத்தில் : திருமதி சிற்றம்பலம் தன்னுடைய நாட்குறிப்பில் அன்றையத் தேதியைப் புரட்டி இதயம் தோய்ந்த நல்லுணர்வின் நன்றிப் பெருமிதத்துடன் எழுதலானாள் : 'சமுதாயத் தீவினைகளுக்கு ட வி ய | ன பெண்களுக்குக் கைகொடுக்க அன்று ஒரு மகாத்மா வாழ்ந்தார். இன்று ஒரு சிற்றம்" பலம் அவர்கள் எனக்குக் கிடைத்திருக்கிறார், என் கனவைச் செயற்படுத்தி நனவாக்க, அவர் தியாக மனிதரானார். எனக்கு நிழலான அவர் இப்போது என்னையும் நிழலாக்கிப் பெருமைப் படுத்திவிட்டார் !... மனிதன் கடவுளாக வாழவேண்டுமென்று எழுதிப் பேசி ; உபதேசம் செய்துவிட்டு, இறுதி யில் திரைமறைவிலே கேவலமான - அற்பத் தனமான - கேடுகெட்ட மிருகமாக வாழ்ந்து போலிக் கூத்து ஆடி அடங்குகிற மாயப் பிர பஞ்சத்திலே என் சிற்றம்பலம் அவர்கள் ஒரு புரட்சி மனிதர். அவர் வாழ்வு எப்போதும் அவர் கைகளிலே தான் மனிதன் மனிதனாகமனிதனாகவே வாழக் கடமைப்பட்டவன் என்ற