பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒரு நடப்பு பூவத்தக்குடி வியாழச் சந்தைக்கெடுவில் சுளையாகப் பன்னிரண்டு பணம் கொடுத்து வாங்கிய பூப்போட்ட தாவணியை அருமை மகளுக்கு ஆசையாகக் கட்டிவிட்டு அழகு பார்த்த கையோடு, அவளைக் கைப் பிடியாக அழைத்துக் கொண்டு சங்கரன் குடியிருப்புச் சேரியிலிருந்து புறப்பட்டு, ஆவணத்தான் கோட்டைக் காளியம்மன் தேரோட்டத்தை எட்டத்தில் நின்று கண்டு களித்தபின், சாம்பான்சாமிக்கு ஒரு கும்பிடு போட்டுக் கொண்டிருந்தாள் மங்கத்தா, அச்சமயம், அங்கு தோன்றிய வீரமணி பாசத்துடன் செல்லியை நெருங்கி அன்புடன் சேஷமலாபம் விசாரித்த நேரத்தில், கரடியாகத் தோன்றி விட்டார் கங்காணி. அக்கரைச்சீமை 'சல்லி'யின் மவுசு’ எட்டுக்கண் விட்டெறிந்த நேரமாயிற்றே - 'நகரம் இளைய ஜமீன் கணக்கிலே இருக்கிற நீ, இருந்திருந்து கேவலம் ஒரு பறக் குட்டிகிட்டவா உன்னோட அருமை பெருமையான அன்பைக் காட்டவேணும் ? சரி, சரி. நீ போய் உண்டியல் போடு !' என்று அருமைத் திருக் குமரனுக்கு உபதேசம் செய்து விட்டுப் பக்கவாட்டில் திரும்பி, "ஏலே மங்கத்தாக் கழுதை ஒங்குட்டி குதிரைக் குட்டி இல்லேயாக்கும் ; நினைப்பு வச்சுக்கிடு. ஊம், இந்தக் கடுத்தம் 'மாப்பு விட்டுப் போட்டேன்! ... இன்னொருவாட் டி என்னோட இளையராஜாகிட்டக்கப் பேச்சுக் கொடுக்கிறதைக் கண்டேன்னா , அப்பவே ஒங்குச்சு பிடிசாம்பவாகிப் போயிடும் ' என்று சிவப்பு விளக்கைத் தூண்டிக் காண்பித்து விட்டு, அசல் ராஜநடை நடந்து சென்றார் கங்காணி. செல்லிக்குட்டி மனம் குமைந்து சிலையானாள் !