பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கிழவி தனக்குள் தானாகச் சிலிர்ப்படைந்தாள். "ஆத்தா, நான் பறிஞ்சு உலை வைக்கிறேன்.' என்று அவள் சேதி தெரிவித்தாள் செல்லி. அரிசி முடிச்சு இப் போது அவள் கட்கத்தில் கொலு இருந்தது. அள்ளிச் செருகிய கொண்டையை விட்டுப் பிரிந்து, ஒரேயொரு சுருட்டை முடி மாத்திரம் வீம்பு பாராட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. கிழவிக்குக் கனவு ஒரு கேடா, என்ன ? ஆனாலும் கனவு விழிப்பவளாகவே தடுமாறினாள் ; தட்டித் தடு மாறினாள். 'ஊம்' என்று அனுமதி கொடுத்தாள். வெறும் அனுமதியல்ல - ஆணை ! -- மகுடிக்கு நாகம் மட்டும் கட்டுப்படுவது கிடையாது! செல்லிக்கன்னி நகர்ந்தாள். வீரமணி பரிவுடன், போlயா செல்லி?' என்று வினவினான். "ஆமாமுங்க, ஆண்டே' இடுக்கு விழுந்து, பீழைசார்ந்து, கலங்கிக் கிடந்த கண்களைச் சேலைக்கந்தலின் முகதலைவைக் கொய்து ஒற்றிக் கொண்ட மங்கத்தா, 'சின்ன எசமான்!” என்று கூவினாள். வேர்க்க விறுவிறுக்கத் திசை திரும்பினான் வீரமணி. தரிப்பல் பதக்கம் ஊசலாடி நின்றது. விழி முனைகளிலே ஈரம் கசிந்தது.