பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 'ஐயாவே ! ஓங்க அன்பு பெரிசு ; ரொம்பப் பெரி சுங்க!- ஆனா, அந்த அன்பை நன்றியோடே எட்டிக் கூடப் பார்க்க முடியாதபடிக்கு, எங்களை ஆண்டவன் ஈனப் பொறப்பாய்ப் படைச்சுப்பூட்டானுங்களே ? அத்தி பூத்ததாட்டம் அருப்புருவமா ஒங்க நல்ல காத்து இங்கணே அடிச்சிருக்குதுங்களே, என்னாங்க விசேசம் ? . கங்காணிச் சாமி இங்கிட்டு நாடிக் குதிச்சுப் போட்டார்னா அப்பாலே எம்பூட்டுக் குடிசை சாம்பலாகிப் பூடுமுங்க ! வெரசாச் சொல்லுங்க வந்த தாக்கலை !' அடிமடியில் 'கமுக்கமாக ஒளிந்திருந்த புகையிலைக் காம்பை ஒரு கிள்ளுக்கிள்ளி வாய்க்கொடும்பில் அடக்கிக் கொண்டதும் தான், அவளுக்கு மண்டை உடை சற்றே விட்டமாதிரி இருந்தது. வீரமணியின் நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. சிந்தனைப் பிடியினின்றும் சித்தம் விடுதலை பெற் றிருக்கலாம். அழகான உதடுகளை அழகாக விலக்கினான்; ஆனால், துடிப்பு விலகினால்தானே ? ஆனாலும், சமாளித்துக் கொண்டான். இவனும் கண்டிச் சீமைக்கு ‘ஒரு கணக்கு போய்த் திரும்பி விட்டவன் இல்லையா ? "மங்கத்தா, வங்களோட பாப்பான் புஞ்சைக் கடலைக் கொல்லைத் தாக்கிலே நாளை விடிஞ்சதிலிருந்து கடலை அரிக்கப் போறோம். முந்தா நாள் பேஞ்ச உழவு மழையிலே, கொல்லை குடிக்காடு ஒட்டுக்கும் ஈரம் பாய்ஞ்சிடுச்சு ; அதுக்காகத் தான் உங்க சேரிச்சனங் களைக் கண்டு தண்டி, கூலிக்கு வந்து வேலை செய்யச் சொல்லி அச்சாரப் பணமும் கொடுக்க இந்தத் தரம் நானே வந்தேன். எங்க காரியஸ்தருக்கு வக்கனை பத்தாது. உங்க சேரி ஆளுங்க ஆம்பளைபொம்பளை அடங்கலுமே முச்சரிக்கை எழுதின மாதிரி எங்கிட்டேத் தான் கூலி வேலை செய்கிறது வளமை ஆகிப்போச்சு. பிடுங்கின கடலைக் கொடியை எங்க மாடி வீட்டு