பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 முகப்பிலே போர் மேயிறவரைக்கும் தினமும் கஞ்சிப் பொழுதுக்குச் சுடுகஞ்சி காய்ச்சி ஊத்துறத்துக்கும் அப்பாரு பெரிய மனசு பண்ணிச் சம்மதம் கொடுத் திட்டாங்க வேணும்னா, உன்னை மாதிரி நன்னி கொண்ட நாலு பத்துப் பேருங்களுக்கு வெத்திலை பாக்கு எஞ்சல்லியிசிலருந்து வாங்கித் தரவும் ரோசிச்சிருக் கேன் சரி, சரி ; அப்பாரு தேடி வந்தாலும் வந்திடு வாங்க தான் புறப்பட்டாகணும் ' என்று விளக்க மாகவே பொழிப்புரை சொன்னான் இளங்காளை. 'கமுசின் சேப்பிலிருந்து ஒரு சலவைப் பத்து ரூபாய்த் தாளை எடுத்து மங்கத்தாளிடம் நீட்ட நெருங்கினான்.” போன வருஷம் வந்தாப்பிலேயே ஆத்தாளும் மகளும் வேலைக்குக் கோழிகூப்பிட வ ந் தி ட னு ம் என்று சொல்லி ரூபாயை நீட்டினான். மங்கத்தாவின் கைகள் ஏன் அவ்வாறு நடுங்கித் தீர்க்கின்றன ? - கோழி கூப்பிடுங்களாங்காட்டி ?' என்று வினாவினாள் கிழவி. சிரித்து விட்டான் வீரமணி. 'பல்லுப் போனாலும் சொல்லுப் போகாதவளாச்சே நீ, மங்கத்தா ? மம்மலிலே கோழி கூவினடியும் புறப்பட்டுப்பிட வேணும். அவ் வளவுதான். இந்தா, பிடிபணத்தை ’’ என்று மேலும் ஒட்டி நடந்து பணத்தை நீட்டினான். "சாமியோ, அஞ்சு ரூபாய்க்காசு குடுங்க போதும் ” "ஆத்தாளும் மகளும் நீங்க ரெண்டு பேராச்சுதே ? ஆளுக்கு அஞ்சு ரூ பாய் அச்சாரம்தானே மாமூல் வாடிக்கை ?' 'அது சுத்தம் தாங்க ; ஆனா கூலிக்கு வரப் போறவ நானு ஒருத்தி மட்டுந்தானுங்களே, ஆண்டே' ஏன், ஒம் மக செல்வி வராதா ?"