பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 > * 'வராதுங்க ஏனாம் ?” "அது சமைஞ்ச பொண்ணாச்சுங்களே சின்ன எசமான ரே ?' 'ஒங்க சேரியிலேருந்து கைவீச்சுக் குறையாம, ஆளான குட்டிங்க வருசா வருசம் வந்துக்கிட்டுத் தானே இருக்காங்க ! 'எம்மவ வரவாய்க்காதுங்க, சாமி. அந்தப்பேச்சை அந்தமட்டோட நிப்பாட்டிக்கங்க; உங்க ஆட்டு உப்பைத் தின்னு வளர்ந்தது எங்க குடும்பம். அந்த நன் னியைத் திரிகரண சுத்தியோடே கும்பிட்டுக்கிட்டு இருப்பேன். ஒரு அஞ்சு ருவாய்க் காசைத் தூக்கி வீசிப்போடுங்க : பொறுக்கிக்கிடுவேனுங்க, சின்னமுதலாளி !' - வீரமணியின் அந்தம் நிறைந்த முகம் முகில்வானமாகக் கறுத்தது. கிழவியின் பேச்சில் முழங்கிய கண்டிப்பு அவன் வாயை லேஞ்சினால் கட்டிப்போட்டது. ஆகவே, ஓர் ஐந்து ரூபாய் நோட்டை, வரவழைத்துக் கொண்டு புன்னகையுடன் கிழவியிடம் கைநீட்டிக் கொடுத்து விட்டான். பயணம் சொல்லிக் கிளம்பியவன், நின்றான். "ஏனுங்க சாமி, நின்னிட்டிங்க ?" “ஒரு சேதி காதிலே விளுந்திச்சே, மெய்தானா ?” "சொன்னாத்தானே புட்டுப்பார்த்தும் புட்டுவச்சும் செப்ப ஏலுமுங்க ?' - “செல்விக்கு தை பிறந்ததும் கண்ணாலமாமே ?” "ஆமாங்க !'