பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 "அப்படின்னா, குளமங்கலத்துக் குப்பன் கொடுத்து வச்ச இளசுதான் !' "மானாபிமானம் கொண்ட நீங்க, அப்பிடி அடாவடியாய்த் துரக்கிப் போட்டுப் பேசுறதானது நாயம் இல்லீங்களே ?” 'மங்கத்தா, நீ என்ன சொல்றே ?” 'இனிமேத்தானுங்க சொல்லப் போறேன், வசமாய்க் கேட்டுக்கிடுங்க : இந்தச் சம்பந்தம் சாடிக்கையிலே, கொடுத்து வச்சது எங்க செல்லிக் குட்டிதானுங்க. மஞ்சிவிரட்டு கழிஞ்சு, பரிசம் போட்டு, ஊர் வெத்திலைப் பாக்குவச்சு, கெட்டி மோளம் கொட்ட வேண்டியது தாங்க பாக்கி ! - மாப்பிள்ளைக்காரவுக எங்க குடிக்கு மேலே ரொம்ப வீச்சுங்க என்னமோ ஆயி அங்காளம்மை தான் இந்தக் கொடுப்பினைக்குத் தடம்காட்டியிருக்கா!...” வீரமணி இன்னமும் சிலையாகவே மலைத்து நிற்கின்றான் ! 'சின்ன முதலாளி, புறப்படுங்க !” ஊம் !' புறப்படப் பாதங்களை நகர்த்தியவன், என்னவோ சொல்ல, அல்லது என்னவோ கேட்க நினைத்துச் சிறுபொழுதிற்கு மெளனம் பேணி நின்றான். அவன், வீரமணி, கிழவி தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டாள். ஈறும் பேனும் அவளைச் சும்மா விடுமா ? ஆனாலும், அவளுக்கு விதரணை கூடுதல். 'சாமியோ !” என்று விளித்திட்டாள். 'ஒங்களுக்கும் தைக் கெடுவிலே கண்ணாலம் கூடப் போவுதாமுங்களே ? பொண்ணு,