பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 'அம்மாங்கொத்த ஒசந்த இடத்துத் தேவதையுங் களா அந்தப் பொண்ணு ?" பின்னே ? ... ' "ஆத்தாடியோ !” "அவள் வெறுந் தேவதையோ, இல்லாட்டி, வெறுந் தெய்வமோ மட்டுமில்லே ... என் நெஞ்சிலேயும் நினைவிலேயும் அல்லும் பகலும் விளையாடிக்கிட்டு இருக்கிற அவள், என்னோட கைப்பிடிக்கு எட்டாத தொலைவிலே இருந்துக்கிட்டிருக்களாக்கும் ! அவள் கொம்புத்தேன் . ஆமா, அவள் கொம்புத்தேனேதான் ! ஆனா ஒண்னு : நான் முடவன் இல்லை !' 'அம்மாடியோ !” மங்கத்தா சிரித்தாள். வீரமணியின் உள்மனம், அழுகிறது. 'நான் சொன்னாத் தட்டமாட்டிங்க ! - அந்தப் பொண்ணான பொண்ணுயாருங்க ? சொன்னிங்கண்ணா, நான் அந்தப் புண்ணியவதியோட பேரை என் மககிட்டே சொல்லுவேன். பேரைக் கேட்டுக்கிட்டு, கும்மாளம்போட ஆரம்பிச்சிடுமுங்க எம் மகள் செல்லிக்குட்டி சொல்லுங்க சாமி, சொல்லுங்க ' 'மங்கத்தா, அந்தப் புனிதமான பேரை - அந்தப் புண்ணியமான பேரை நானே வலியவந்து உங்கிட்டே சொல்லாமல் தப்பவும் முடியாது ! ... போயிட்டு வாரேன் ! ...” - 'ஐயாவே !' "என்ன, மங்கத்தா ?” வி-2