பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 'அந்தப் பேரை அவரு சொல்லியிருந்தால், நான் இந்நேரத்துக்கு அதை உங்காதிலே ஓதி விழுக்காட்டாமல் இருந்திருப்பேனா என்ன ?” 'அம்புட்டுத்தானா ?” "ஆமா அம்புட்டேதான் !...ம்... யாரோ ஒரு தேவதையோ, இல்லே ஒரு தெய்வப் பொண்ணோ உன் சின்ன முதலாளியோட பொன்னான மனசிலே பூவாக் கு டி கொண் டி ரு க்க ளா ம் ஆனா, அவ எட்டாக்கைக் கொம்புத்தேனாக்கும் ?. "நம்ம சின்ன எசமானரு மனசு வச்சாக்கக் கைக்குக் கிட்டாத கொம்புத்தேன் ஒண்னு இந்தச் சுற்று வட்டைப் பதினாறு நாடுநகரத்திலே இருக்க வாய்க்குமோ ஆத்தா ? சங்கதி ஒரே மூடு மந்திரமாயில்ல இருக்குது, ஆத்தாளே?” . . 'அந்த மூடுமந்திரம் என்னிக்காச்சும் ஒரு நாளைக்குச் சிதம்பர ரகசியமாக ஆகாமலா போயிடப் போகுது ? ஆனா, ஒரேயொரு சங்கதியை மட்டும் கோடி காட்டினாக நம்ப சின்னவரு ?” 'சொல்லு, ஆத்தா !” “ஏண்டி மகளே இப்படிப் பறக்கிறே! தன்னோட மனசைக் கொள்ளைக் கொண்டிருக்கிற அந்தத் தங்கப் பெண்ணோட பேரை ஒரு நாளைக்கு அவராகவே எங்கிட்டே வந்து சொல்லிப்பிடுறதாகவும் வாக்குச் சொல்வியிருக்காராக்கும் !' - 'ஒகோ, என்னோட சின்ன எசமான் அப்படியொரு திருப்பத்திலேயா கதையை மடக்கி நிறுத்திப்புட்டாரு'வெடிக்கத் துடித்துக் கொண்டிருந்த அழகுக்குட்டி செல்லியின் கன்னிநெஞ்சினின்றும் விம்மல் பொடித்தது. வெள்ளிச் சூடுகாட்டம் மட்டுப்படவில்லையே!