பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮛ அப்படியா, ஆத்தா ?” செல்வியின் கன்னி நெஞ்சினின்றும், கன்னிகழியாப் பெருமூச்சொன்று எட்டுக் குடிசைகளுக்குக் கேட்கிற பாவனையில் விம்மிப் புடைத்து வெடிக்கத் தொடங்கு கிறது ! தாய்க்கிழவி அடிநெஞ்சிலே தீத்துண்டம் பட்ட பாங்கிலே, ஓர் இமைப்பொழுது துடியாய்த் துடித்துப் போனாள். அடியே ஒன்னைத்தாண்டி நீ எதுக்குடி இப்படிக் கொம்பேறி மூக்கனாட்டம் பெருமூச்சை முட்டிப் புடிச்சுத் தள்ளுறே? என்னவோ புறம்போக்குச் சென்ம மாய்ப் பொறந்திட்ட பறைச்சியான ஒன்னைத்தேடி ஒடியாந்து, வெத்திலை பாக்கு வச்சு அழைச்சு, ஒங்கழுத் திலே ஊருக்கு ஒசந்த அந்தப் புள்ளை தங்கத் தாலியைக் கட்டிப்புடுவார்னு கோட்டை கட்டிக்கிட்டு இருக்கிற வ ளா ட் ட மி ல் லே தோணுது ஒம்பெருமூச்சைக் கேட்டாக்க ?... போடிபோ, போக்கணங்கெட்டவளே !'. -வீர்யமான ஆத்திரம் முழங்கிட ஏங்கினாள் மங்கத்தா, சேரிச் சொறிநாய் ஊளையிடுகிறது. 'ஆத்தாளே ! மகள் செல்லி வீரிட்டுக் கூவினாள் ; 'ஊர் நாட்டுக்கு ஒசந்த என்னோட சின்னக்கங்காணி நாளைக்கே எங்கழுத் திலே தாலியைப் பூட்டி மூணுமுடிச்சுப் போட்டு டுவார்னு நான்மனக்கோட்டை கட்டிக்கினு இன்னிக்குக் குந்திக் கிடக்கிறதாய் எம்மேலே நீ தப்புப்படிச்சு, என்னை நீ "நைச்சியம்’ பேசி நையாண்டி பண்ணுற இரக்கமத்த