பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஒம்புட்டு வாய்ப்பேச்சையும் ஏச்சையும். இப்பதைக்கு இம்மட்டோட நிப்பாட்டிக்கிடு, ஆத்தா!... ஆனா ஒருகாலத் திலே, சின்ன எசமான் எங்கழுத்திலே விளையாட்டுத்தாலி கட்டி மனசு பூரிச்சுப்போன ஒசத்தியான அந்தப் புண்ணி யத்தை மட்டுக்கும் நீ மறுந்துப் பூடாதே - ஆமா, செப்பிப்பூட்டேன் ஒலமிட்டாள் கன்னி. இளமான். ஊளைச் சத்தம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. மங்கத்தா மதிகலங்கிக் கதிகலங்கினாள் தொண்டை அடைத்தது. பெண்ணை நேருத்திரமாய்ப் பார்வையிட லானாள். காய்ந்த உதடுகள் விலகின. 'குப்டை மேடு எப்பவுமே கோபுரமாக உருமாறவவிக்காதாக்கும் என்கிற அதிசயச் சுத்தமான அந்த வேடிக்கை விதியை நீ மறந்துப்புடாம, முடிபோட்டு வச்சிக்கிடு 1 ஆமா, சொல்லிப்புட்டேன்!” என்று வீறு கொண்டு முழக்க மிடலானாள் கிழவி, 'குப்பைமேடு கோபுரமாக ஆக வாய்க்குமோ, வாய்க்காதோ எனக்குத் தெரியாது - நான் சின்னஞ் சிறிசு ! ஆனா, நான் நினைச்சா- நான் வைராக்கியமாய் மனசு வச்சா, என்னை நானே கோபுரமாக ஆக்கிக்கிட முடியுமாக்கும்!” சவால் விட்டாள் செல்லி. "அப்பிடிக் கோபுரமாக ஆக உன்னாலே இந்தச் சென்மத்திலே ஏலுமாடி பொண்ணே?' 'ஏன் முடியாது ? நல்லாய் முடியும் மேளத்தாளத் தோட முடியும் கொட்டு முழக்கோட முடியும்!... ஆமா!' "அடிபாவி!” என்று வீரிட்டு அலறிவிட்டாள் மங்கத்தா. - -