பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நான் இதுமட்டுக்கும் பாவியிலேயும் கேடு கெட்ட பாவியாய் இருந்ததென்னமோ பொய்யே. இல்லேதான் !ஆனா, இது முதற்கொண்டு நான்தான் புண்ணியவதி. எம்புட்டு நெஞ்சிலேயும் நினைப்பிலேயும் சதா விளையாடிக்கிட்டிருக்கிற என்னோட சின்ன-முதலாளியே தான் இனி எனக்குப் புருசன் முத்தானை போடுற பொசிப்பு எனக்கு விதிச்சிருந்திச்சின்னா, அவருக்கேதான் இந்தப் பிறப்பிலே முந்தானை விரிப்பேன் ஆத்தா அங்காளம்மை பேரிலே ஆணை இது ' -- - - - - - - மங்கத்தா அடிவயிற்றில் அடித்துக் கொண்டு கதறினாள்” இந்தப் பாளத்த, பாவமான பேராசை எந்தத் தெய்வம் திருவுளத்துக்குமே அடுக்காதடி, பொண்னே!” - - "ஆத்தாளே !' என்று வீரிட்டாள். "ஆமாடியோ மறு தக்கமும் செப்பிப்பிடுறேன் ! - உன்னோட இந்த அநியாயமான - மே ச மா ன - பாவமான் பேராசை எந்தத் தெய்வந் திருவுளத்துக்குமே அடுக்காது ; அடுக்கவே அடுக்காதடி, ஆத்தா !” மஞ்சள் பூசிய முகத்திடை ரத்தம் கன்றிச்சிவந்திட, அள்ளிச் செருகப்பட்ட கொண்டையைவிட்டு மருக் கொழுந்து ஒன்று சிதறி வீழ்ந்திட, செல்லிக்கன்னி விண் முட்டி மண் முட்டச் சிரித்தாள் ; மண் முட்டி, விண் முட்டிடவும் சிரித்தாள் எதுபாவம் ? பேராசை எது ? பேராசை எது ? நம்ம குலச்சாமியான நந்தனுக்கு வழி மறிச்சிக் கிடந்த நந்தி வழி விட்டுச்சுதாமே அது பாவமா ? .. இல்லே, வழி கொடுத்த தெய்வத்தை அந்த நந்தன் வழிபட்டுக்கும்பிட்டது பேராசையா ?ஊம், பதில் சொல்லிப் பேசு, ஆத்தாளே !' என்று கேள்விக் கணையைத் தொடுத்துக் கொண்டே சிரிப்பைத் தொடர்ந்தாள், ஆளான பூஞ்சிட்டு. -