பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 செய்வீங்களாம் ?' என்று நிதானமாக்குக விசாரித்தாள் அவள். ---- கங்காணியின் நரைதிரண்ட முறுக்கு மீசை, முறுக்க விழாமலேயே துடிக்கத் தொடங்கியது. "என்ன செய்வேனா ?' என்று கொக்கரித்த வண்ணம் பாய்ந்து வந்த அவர் செல்லியின் கைகளை எட்டிப் பற்ற முனைந்தார். - - செல்லி பிடி கொடுப்பாளா ?-'ஐயா, பெரியவுகளே மருவாதை குடுத்து மருவாதையை வாங்கவேனும் 1. கும்பிடு குடுத்துக் கும்பிடு வாங்க வேணுமென்கிறதுதான் மரியாதைக்கும் ! காந்திச்சாமி செத்துச் சிவலோகப் பறிஞ்சிட்டதாலே, ஒங்களை மாதிரியான பெரிய மனுஷங் களுக்கெல்லாம் நாங்க இளக்காரமாகப் போயிட்டோ மாக்கும் ?...ரோசத்தோடவும் மானத்தோடவும் நான் செப்பிறத்தைக் காது குடுத்துக் கேட்டுக்கிடுங்க ; நீங்க எனக்கு மாமனார் முறை ஆனதாலேதான், இந்த மட்டுக்கும் மரியாதை கொடுக்கிறேனாக்கும் 1...இந்திாங்க, எங்க ஆத்தாளுக்கு எங்க சின்ன எசமானர் தந்த அச்சாரம் ரூவா அஞ்சு பொறுக்கிக்கிடுங்க எனக்காக வீசின. பணத்தையும் மேனியை விளச்சுப் பொறுக்கிக் கிணு, வந்த வழியே திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுங்க!...” என்று எச்சரித்தாள் அவள். அவள் செல்லி. 'என்னாடி சொன்னே தேவடியாச்சிறுக்கி ?... தானாவது உன் மாமனாவது ? என்னா ஒனக்கு ?” இ' - கங்காணிக்குக் கோபம் வந்தால், காடு கொள்ளாது தான்!- அக்கரைச் சீமைக்கோடுகளில் வளர்க்கப்பட்ட கோபம் அல்லவா? மீசை துடிக்க, பதினாறு வயசு காளை