பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாய்ந்து, செல்லியின் கைகளைப் பற்றிய மறு இமைப் பில், 'ஆ '; என்று வீரிட்டு அலறினார் கங்காணி. ருத்ரகாளியாகச் சிரிக்கிறாள் செல்லி ... விடுதலைப் பறவையாகச் சிரிக்கிறாள் செல்லி ! கங்காணியின் கன்னங்கறுத்த முகத்தில் எச்சில் துளிகள் சொல்லிச் சொல்லி வழிந்து கொண்டேயிருந்தன பாவம் !... செல்லி சுய உணர்வை மீட்டுக் கொண்டாள். கண்கள் வழிந்தன. "என்னைச் சபிச்சுப்பிடுங்க!” என்று கைகூப்பிக் கெஞ்சினாள் கன்னி. இப்பொழுது அவள் ருத்ரகாளி அல்லவே !' நான் ஒங்க அருமை மகனுக்கு வாக்கப்படப் போற சொக்கப்பச்சைங்க மறந்துப் புடாதீக !' . கங்காணி பாவம், குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை ! - மானம் தாக்குக் கயிற்றிலே குற்றுயிரும் குலைஉயிருமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பொடியன் மூக்கனுக்குத் தப்புத்தாளத்தோடு பாடக் கூடத் தெரியும்; நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட சோடி தானுங்க : "...