பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ அப்போது : ஐயா கங்காணி ஐயாவே !' துவாலையை ஓர் அருவருப்புடன் தோளில் மிடுக் கோடு போட்டுக் கொண்டவராக, கம்பீரம் ரவைகூட கெடாமலேயே தலையை ஆணவச் செருக்குடன் நிமிர்த் தினார் கங்காணியார். ஓ ! அந்த எச்சில் துளிகள் மாயமாய் மறைந்தனவோ ? - நீ யா ?” என்றார் ஆகிiா, "பின்னேயாராம் ? - ஆமா, நானேதான் 1. சேரிச் செல்லிக்குட்டியைக் கூலி வேலைக்கு வரப்பண்ணிப்பிடு றதாய் நீங்க எங்கிட்டே பந்தயம் கட்டிக்கிட்டு வீராப் போடே ஒட்டமும் நடையுமாய்ப் பறிஞ்சு வந்தீங்களே? -என்னா ஆச்சு ?- நீங்க எங்கிட்டே மட்டும் தோத்துப் போயிடலே என்னோட அன்ப்ான செல்லிப்பொண்ணு கிட்டவும் நீங்க மண்ணைக் கல்விப்புட்டீங்களாக்கும்!” "மகனே !’ "உங்க மகன் செத்துப்போய் நாழி ரெண்டுக்கு மேலே ஒடிப்புடுச்சுங்க, கங்காணியாரே !' "ஐயையோ, மகனே ! உன் வாயாலே இனியொரு கடுத்தம் அப்படிச் சொல்லிப்பிடாதேடா, என் ராசாவே! நீ இல்லாட்டி, அப்பாலே, எனக்கு ஊர் ஏது ஒலகம் இது و هم .