பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறுகணம் : மாவாவே !’ ஈரல்குலை நடுநடுங்க, கண்ணிரும் கம்பலையுமாக ஏறிட்டு விழித்தார் கங்காணி. அங்கே மிகவும் நூ த ன மா ன தோர் ஆறுதலுடன், வைராக்கியச் சிலையாகக் குறுக்கு மறித்து வந்து நின்றாள் செல்லிக்குட்டி. 'மாமாவே உண்மையானமெய்யான - பரிசுத்தமான அன்புக்குக் கொடுக்கத்தான் தெரியும் ஆனதாலே இப்ப நான் என்னையே உங்க மகனுக்கு உங்க தங்க ராசாவுக்கு கொடுத்திடப் போறேனுங்க!' என்று உணர்ச்சி வசப்பட்டு விம்மிய வளாக, அடிமடியிலிருந்து மஞ்சள் முடிபோட்டிருந்த பழைய சணல் கயிறு ஒன்றை எடுத்துப் பிரித்தாள். 'மாமா ! இது என்னான்னு தெரியுமுங்களா ? என்னோட சின்ன எசமானரு அந்த நாளையிலே எனக்குக் கட்டின விளையாட்டுத் தாலியாக்கும் . இதே விளையாட்டுத் தாலியை உங்க அருமை மகன் இப்ப என்னோட கழுத்திலே நிசத்தாலியாகவே கட்டப் போறாங் களாக்கும்!... ஒங்க அருமை மகன்காரர் ஒங்களுக்கு வேணும்னா, எங்க ரெண்டு பேரையும் நல்ல மனசோட நீங்க மனப்பூர்வமாய் ஆசீர்வாதம் செஞ்சாக வேணு மாக்கும் ம்... என்னா சொல்லுறிங்களாம் ?' முழங் கினாள் செல்லி. செல்லிதானா அவள்