பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒழுங்கைக்கரைப் புளியந்துாரடித் தொழுவத்திலே அவிழ்த்து விடப்பட்டிருந்த வெள்ளைக் கிடாரி, பசுத் தாயின் பால் மடியை முட்டி முட்டிப் பாலமுதம் பருகிக் கொண்டியிருந்தது. உண்மை வெயிலுக்குச் சூடு, சுரணை பிறந்திருக்கலாம். திடீரென்று கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுந்தரி, வீரமணியின் சுந்தரி கழுத்துத்தாலி ஏங்கித் தவித்து ஊசலாட, மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கிக் கொண்டே விம்மி வெடித்தவளாகத் தலைவிரி கோல மாக வந்து நின்றாள் - ஐயையோ ! என்னோட ஆசை மச்சானைக் கண்ணுப்புறத்திலே காணவே இல்லைங்களே ? மச்சான்காரவுக என்ன ஆனாங் கண்ணும் என் புத்திக்கு மட்டுப்பட வாய்க்கலிங்களே?தேம்பாமல் கண்கள் அழ, தேம்பித் தேம்பி வாய் அழுதது. கண்ணிரும் வேர்வையும்தான் வாழ்க்கைச் சோதனைக் கான சவால்களா ? கசங்கி வாடிய மகிழம்பூச் சரத்தி லிருந்து நாலைந்து பூக்கள் கொசுறு காட்டிக் கொட்டின. நெற்றிக் குங்குமத்தைச் சுட்டித்தனமான கெட்டியோடு பாதுகாத்துக் கொண்டு முத்துக்களை மாலை தொடுக் கிறாள் அவள். அவள் ; சுந்தரி !-வீரமணியின் சுந்தரி அல்லவா ? சின்னாயி மகள் சின்னம்மா திரும்பி வந்து கைகளை விரித்தாள். - சேரிச்சோம்பான் கைத் தடியை ஈசான்ய முடுக்கில் ஆத்திரம் தூள் பறக்க வீசி விட்டுச் செருமலானான்.