பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 பனங்குளம் அப்பத்தாக்காரி ‘விடு போ, போ' என்றதை லட்சியம் செய்து, காடு வா, வா’ என்றதை மட்டும் இலட்சியம் செய்யாமல் வந்து நின்றதும்தான் மூக்கைச் சிந்தி எறிந்தாள் ; எம் பேராண்டி வீரமணி இளசு அக்கம் பக்கம் பதினாறு ஊர் நாட்டிலேயும் அசல் சொக்கப் பச்சைத் தங்கம்னு பேரெடுத்ததா ச்சே!-- ஆத்தாடி சுந்தரியோ உம் மச்சானுக்குள்ளே நீயும் உனக்குள்ளே உன் மச்சானுமாய்க் கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சுக்கிட்டு, திருட்டி பரிகாரத்துக்குச் சில்லறைப் பொணக்குகூட இல்லாமல், கூத்துக்கும்.மாளமுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கிற அருப்புருவமான சோடிங்க ஒங்க மேலே ஊசோட திருட்டிதான் பட்டுக்க வேணும்!” நாவு தழதழக்கத் தாழ்.குரலெடுத்துப் பேசினாள் ; ஒரு சமயம், அந்நியம் அசலான் எவனாவது திடுதிப்னுவந்து புருசன்-பெஞ்சாதி உங்க பேரிலே பொச்சரிப்புப்பட்டு உட் மச்சானை மாயமந்தரம் பண்ணி மசக்கி, உம் மச்சானோட நல்ல புத்தியைக் கெடுத்துக் குழப்பிக் காடுமாத்தியிருப்பானோ, என்னமோ ?”-குடுகுடு கிழவி கிடுகிடு வென்று தட புடலாகப் பேசினாள். 'ஆத்தாளே ... ஆத்தாளே ! மகமாயி ! சூன்யத்திலே நின்றால் என்னவாம் ? கூப்பிட்ட குரலுக்கு மகமாயி வரமாட்டாளா ?-வரவேண்டாமா ? பூங்கரங்குவித்துப் பூவின் புனிதத் தோடு தொழுதபடி, தங்கக்கழுத்தில் ஊஞ்சலாடிய தங்கத் தாலியைப் பூவிரல் கள் நடுங்கப் பதட்டத்துடன் பற்றுதலோடு பற்றி எடுத்துக் கண்களிலும் கண் க ளி ன் கண் ணி ரி லு ம் ஒற்றிக் கொண்டாள் சுந்தரி, மறு இமைப்பிலே, விசுக் கென்று உள்ளே விரைந்தாள்; மிஞ்சியும் மெட்டியும் ஒலிக்கவும் தங்கமான வளையல்கள் எதிரொலிக்கவும் விரைந்தாள்.