பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நடையில் - இருட்டைத் தேடியது மின்னொளி. ஆசைக்கணவனைத்தேடினாள் அருமை மனையாட் டி! ஆசை மச்சானே !! நேசமச்சானே ! உங்களுக்கு என்ன ஆச்சு ? நீங்க என்ன ஆனிங்க ? முக்கால் நாழிப் பொழுதுக்குமுந்தி, நீங்க இந்தப்பட்டு மெத்தையிலே புரண்டுக் கிட்டு இருந்தீங்களே ? எங்க பனங்குளம் நாட்டு வைத்தியர் ஐயா சொன்னமாதிரி, ஒங்களுக்கு மல்லிக் காப்பித் தண்ணி வைக்கிறதுக்காகப் பாலைக் கறந்து சூட்டடுப்பிலே வச்சுமூடிப்புட்டு, சீனிவாங்கச் சாலை முக்கத்துக்கு ஒட்டமாய் ஒடித் திரும்பியாந்து பார்கை யிலே, உங்களைக் கானலிங்களே ? என்னைப் பிரிஞ்சு ஒருநாழிகை கூட இருக்க ஒப்பாதவங்களாச்சே நீங்க ? நீங்க இல்லாகாட்டி, இம்மண்ணிலே நான் எப்படிங்க உயிர் தறிப்பேன் ... ஐயையோ ? ஆடிப்புனலென ஒடியது விழிநீர். திரும்பினாள். சுவரில் பெரிதாகத் தொங்கிய திருமணப் படத்தை வைத்த கண் வாங்காமல் அரைக் கனம் பார்த்தாள் திரும்பியவள் மடங்கிய தருணத்தில், கால் இடறவே, நின்றாள். நின்றவள், அப்படியே சிலையாய்ச் சமைந்தாள் மறு கனத்தில் சிலைக்கு ஜீவன்மீண்டதுபோலும் - 'மாமன் மகனே ! ஒங்க அன்புபெரிசு; ரொம்பவும் பெரிசு; நீங்க எனக்கின்னு எப்பவோ வாங்கிவச்ச இந்தப்பட்டுப் புடவையையும் ரவிக்கையையும் இப்பலாச்சம் நான் உப யோகப் படுத்த வேளை வருமா ? இல்லே...?- பளபளப் புக்காட்டி, விதியாகச் சிரித்தவாறு கிடந்த துணிமணிகளை நெஞ்சருகே மீண்டும் பார்வையிட்டாள். கண்களும் உருகியிருக்கலாம் ஏங்கித் தவித்தாள் சுந்தர்.