பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 முகட்டில், புறாஜோடி காதல் லீலைகளில் லயித் திருந்தது. கணங்கள், பேய்க் கணங்களாக ஊர்ந்தன. அப்பத்தாக்கிழவி என்னவோ சொன்னாளே ? - " ... அந்நியம் அசலான் எவனாவது திடுதிப்னு வந்து, புருசன் பொஞ்சாதி ஒங்க பேரிலே பொச்சரிப்புப்பட்டு, உம் மச்சானை மாயமந்திரம் பண்ணி மசக்கி, உம் மச்சானோட நல்ல புத்தியைக் கெடுத்துக் குழப்பிக் காடுமாத்தியிருப்பானோ, என்னமோ? - சோதனைதான் வாழ்க்கையா ? நெருப்புப் பொறி மார்பிலேபட்ட மாதிரி துடித்தாள் சுந்தரி 1 - அந்த நாளையிலே நானும் என் மாமன் மகன் முத்தையனும் பரிசம் போட்டுக் கண்ணாலம் செஞ்சிக் கிடவேணும்னு முடிவு செஞ்சிருந்ததை அறிஞ்ச கிழவி, ஒரு வேளை, என் மாமன் மகன் செத்துப் பிழைச்சு இங்கிட்டு வந்த துப்பைக் கேள்விப் பட்டிருப்பாளோ ? ... பொய்யாகிப் போக எங்க பழங்கதையை மனசிலே மற்க்காமல் நினைப்பு வச்சிட்டுத்தான், இந்தக் கிழவி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறதாட்டம். ஏடா கூடமாய் அப்படிப் பேசியிருப்பாளோ ? எம்புட்டு மாமன் மகன் தங்கக்கம்பின்னா தங்கக் கம்பி ஆச்சுதே உலை வாயைத்தானே என்னாலே மூட ஏறும் ? ... ம் மனசுக்கு மனசுதான் சாட்சி ; மற்றதுக்குத் தெய்வம் சாட்சி இருக்குதே !' - நெஞ்சின் அலைகள் கரை சேராதா, என்ன ? - நிலைப்படியை இலக்காக்கி நடந்தாள் சுந்தரி. பழுப்பேறிய பழைய பத்திரிகை ஒன்று உச்சிப் பரணிவிருந்து காற்றடித்தது வீழ்ந்தது. •