பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வெறி பிடித்த சிங்களச் சிப்பாய்களைத் தமிழின உணர்வு மேவிட வீரத்தோடும் தீரத்தோடும் எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் புலிகளின் படம் வெட்ட வெளிச்சமாகப் பளிச்சிட்டது ! அந்தப் படத்தை உன்னிப்பாகப் பார்த்தாள் சுந்தரி!போர்க்கோலம் தாங்கிய விடுதலைப் புலிகளின் மத்தியில் தன் மாமன் மகன் முத்தையனைத் தரிசித்ததும், அவள் அப்படியே மெய் மறந்தாள். எம் மாமன் மகன் ரொம்ப ரொம்ப பெரிய ஆள்தான் ! - மாமன் மகனை இனம் காண்பதற்குக் கட்டப் பொம்மன் மீசையை விடவும் வேறு ஒர் அடையாளம் வேண்டியதில்லைதான்!முத்தையனுக்கு வணக்கம் தெரிவித்தாள். கன்றின் குரல் சுதந்திரமாகக் கனிந்து வந்தது. சுந்தரி சுய உணர்வுகளை மீட்டுக் கொண்டாள். நெஞ்சில் என்னவோ உறுத்தவே திடுக்கிட்டுக் குனிந்து பார்த்தாள். பொன்னாக மின்னிய இரட்டைவடச் சங்கிலியுடன் இசகு பிசகாகப் பின்னிக்கிடந்த தாலியைச் சீராக்கிக் கொண்டாள். உந்திக்கமலத்தில் ஆசைமச்சான் வீரமணியின் அழகான, அன்பான, பாசமான, நேசமான சிரிப்பு எதிரொலிக்கக் கேட்டதுதான் தாமதம் ! - 'ஐயையோ, மச்சானே !’ என்று கூவிய வண்ணம், நடையைத் தாண்டிப் புயலென வெளியே பாய்ந்தாள் சுத்தரி ! புயலில் சிக்கிக் கொண்ட தீபம் ஏந்திய அந்த அகல் விளக்கே அப்போது புயலாகிவிட்டதோ 啤必必条 வீரமணிக்கு குடிக்கானியாட்சிப் - பாத்தியதை கொண்ட மச்சுவீட்டின் திட்டிவாசலில் இப்போது நெரிசல் மேலும் கூடியது.