பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.1 காலமும் புள்ளிமானும் ஓர் இனம். திடீரென்று - பழைய பரபரப்பு மீண்டும் திரும்புகிறது. 'நம்ம வீரமணி அண்ணாச்சி அந்தாவே வந்தாச்சு!” சுந்தரி விக்கலுக்கும் விம்மலுக்கும் ஊ டா க ஊசலாடியவளாகத் த ன் னு ைட ய நேசமச்சான் வீரமணியைக் கைத் தாங்கலாகப் பற்றி அணைத்த வண்ணம் வந்து நின்றாள் - சுற்றிச்சூழ நோக்கிக் கை குவித்தாள் ! இணையும் பிணையுமான இ ள ம் பூஞ்சிட்டுக்கள் நீர்த்தொட்டி விளிம்பில் அமர்ந்து நீராடிக் கொண்டி ருந்தன. - 'நல்லகாலம் ! எம்பேராண்டியை எந்தப் பட்டுக் கெடப்பானும் சொக்குப்பொடி போட்டு மசக்கிக் காடு மாத்திப்பூடலேதான்!' - அப்பத்தாக்காரியும் நீதிபதி ஆகிறாள், புயலோடு புயலாகச் சாடிப் பாய்ந்த அகல்விளக்கு இப்போது தி அலுங்காமல், தீபம் நலுங்காமல் அலாதி யான ஒப்பனையில் சிரிக்கிறது. சுந்தரி, வீரமணிக்கு உடைமை பூண்ட சுந்தரி, 'மச்சான் காரவுகளே !’ என்று விளித்த வண்ணம், முருங்கைப் போத்தில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த கற்றாழை நார்க்கட்டிலை வலது முன்னங்கால் பெரு விரலால் குறி தப்பாமல் தரையிலே தள்ளிவிட்டாள். சுகமான - கதகதப்பான தன்னுடைய இ ன் ப அணைப்பிலே கிடாப்புச் சேவலாக முடங்கிக் கிடந்த வீரமணியை இனிய ஸ்பரிசத்தால் உசுப்பிவிட்டாள். .ெ கா டு வாள் மீசையைத் த ட வி விட்டாள்.