பக்கம்:விளையாட்டுத் தாலி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 "மச்சானே ! நல்ல நினைப்போட ரவைநேரம் கட்டிலிலே குந்திக்கிடுங்க. சீனி வாங்கியாந்திட்டேன். காய்ச்சல் வாய்க்கு உணக்கையாய் மல்லிக்காப்பி வச்சுக்கொண்டாத் திட்றேன்." என்று நயந்து கெஞ்சி, kரமணியைக் குந்த வைததாள. "தங்கச்சி சந்தைப் பேட்டையிலே யாரோ காதைக் கடிச்சாங்க ஒடியாரேன் ! உம் மச்சானுக்குப் பின் சாமத்திலவே அனல் காய்ச்சல் படிமானத்துக்கு வந்திருக்க வேணுமே ?' என்று விசாரித்தார் நாட்டு வைத்தியர் சன்னாசி அம்பலம். "ஆமாமுங்க, ஐயா , மச்சானோட காச்சல் படிஞ்சு, மம்மலிலே அசந்து துங்கினாங்க : நானு பாலைக் கறந்து கலவடையிலே வச்சு மூடிப்புட்டு, சாலைக்குச் சீனி வாங்கியாரப் பறிஞ்சேனுங்க. சீனியை வாங்கிக் கிட்டுக் குறுக்கு மறிச்சுப் பாய்ஞ்சு வீட்டுக்கு ஒடியாந்து பார்க்கையிலே மச்சானைக் காணல்லேங்க 1 முதல் கடுத்தம் ஊரெங்கும் சல்லடை போட்டுப் பார்த்திட்டேன். மறு கடுத்தம் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கினு கங்காணி மாந்தோப்பிலே மடங்கினப்ப, எம்புட்டு ஆசைமச்சான் பாதாளக் கேணித் திட்டுமேலே ஏறி நின்னுக்கிட்டிருந்தது தெரிஞ்சது. ஈரல்குலை நடுங்கப் பின்வசமா ஓடினேன். பாதாளக் கேணியிலே குதிக்கப் போன என் நேசமச்சானை அப்படியே முதுகைப் புடிச்சிப் பின்னுக்கு இழுத்து என்னோட நெஞ்சோட நெஞ்சாய் அணைச்சுக்கிட்டேனுங்க ஆயி மகமாயி புண்ணியத்தாலே என்னோட தாலிபாக்கியம் நிலைச்சிருச் சுங்க மச்சான்காரங்க ராத்துக்கத்திலே இன்னம் மிச்சம் சொச்சம் வச்சிருக்காங்க போலே. நீங்களும் ஒரு மிடறு மல்லித் தண்ணியை ஊத்திக்கிறது. பொறகாலே மச்சா வுைக்கு மருந்து கிருந்து கொடுக்கலாமுங்க, ஐயா !'